அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் வகையில் சுற்றறிக்கை.

0

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி மற்றும் ஜனவரி 3 ஆம் திகதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரின் சம்பள வித்தியாசத்தை நீக்கும் தீர்மானங்களுக்கு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தேசிய சம்பளம் மற்றும் ஊதிய ஆணையம் மெட்டும் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசசேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் 51,682 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply