உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.

0

தென்னிந்திய திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

இவர் தற்போது ‘ஆர்டிகிள் 15’ இங்கு திரை படத்தின் தமிழ் ரீமேக்கான “நெஞ்சுக்கு நீதி ” படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும்பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க
இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசில் , உதயநிதியின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply