இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் பேருந்து
கட்டணத்திற்கான இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய
அடுத்த மாதம் முதல் குறித்த திட்த்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் அதிவேக நெடுஞ்சாலைகளில் இதற்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு இணங்க இந்த அட்டைகளை அறிமுகப்படுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



