பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு.

0

நாட்டில் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரம் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.

அத்துடன் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை, போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

மேலும் , புதிய கட்டண திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியாகும் என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

ஆகக் குறைந்த பேருந்து கட்டணமாக 20 ரூபாவை நிர்ணயிக்குமாறு, பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இன்று இந்த தீர்மானம் வெளியாகவுள்ளது.

Leave a Reply