அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.

குறித்த படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு , கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

குறித்த பாடத்தை,24 ஏ. எம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், தன்னிடம் பெற்ற 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை வெளியிட இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளனர்.

Leave a Reply