அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முனெடுத்த போராட்டம்.

0

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முனெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தீப்பந்தம் ஏந்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன் கினிகத்தேனை காவல் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘ அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில், அப்பாவி மக்கள் என்னை சட்டிக்குள், போதும் போதும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே ‘ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும் அரசாங்கம் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply