அடுத்த போராட்டத்திற்கு களமிறங்கும் மக்கள் விடுதலை முன்னணி.

0

நாட்டின் சில பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணியினரால் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் உர பிரச்சனை என்பவற்றுக்கு தீர்வு பெற்று கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், பூண்டுலோயா, கதுருஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்தப் போராட்டங்களில் இணைந்து கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply