மக்களுக்கு விடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் , இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க, உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply