கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்.

0

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக குறித்த கொள்கலன்கள் இவ்வாறு துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசி,சீனி,பருப்பு, கடலை, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய பொருட்கள் குறித்த கொள்கலன்களில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவற்றை விடுவிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடம் தற்போது கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply