100 கிலோகிராம் தேயிலைக்கு அரசாங்கம் அறவிடும் தீர்வையை குறைத்து அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விசேட வர்த்தமானி பெருந்தோட்ட அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2006 ஏப்ரல் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 1441/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் ஒவ்வொரு 100 கிலோவுக்கு 400 ரூபாவாக தீர்வை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெருந்தோட்ட அமைச்சரினால் குறித்த தீர்வையை ஒவ்வொரு 100 கிலோவுக்கும் 300 ரூபாவாக குறித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
மேலும் கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



