ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” படப்பிடிப்பு அரங்கில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கின.
இந்நிலையில் தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.
அதுபோல் கமலஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கின்றார்.
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோட்டுக்கு சென்றது.
தற்போது இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்நிலையில் இந்தியன் 2 திரை என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் நடிக்க முடியாது என்று வெளியேறிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆகவே அவருக்கு பதில் வேறு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் குறித்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
தற்கால காஜல் அகர்வாலுக்கு பதில் கமலஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு தமன்னாவை ஆரம்பத்திலிருந்து நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



