பாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை…!!

0

ஆன்மிகம் மனிதன் மானம் என பார்க்கப்படுவது முதலில் அவனது உடல் தான்.

இந்த உடலை மறைப்பதற்கு அணியப்படும் ஆடை பருத்தியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இந்த பருத்திக்கு ஒருவரின் மானத்தைக் காப்பாற்றும் ஆற்றல் ஆன்மீகத்தில் இருக்கிறது.

அவ்வாறு இந்த பருத்தி பஞ்சினுள் இருக்கும் பருத்திக் கொட்டையை மூன்று கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு கைப்பிடி கல் உப்பையும் எடுத்து கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையை ஒரு சிறிய துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு, உறங்கும் முன் உங்களது தலையணையின் கீழ் வைத்து மூன்று நாட்கள் உறங்க வேண்டும்.

பிறகு இந்த முடிச்சுக்குள் இருக்கும் கலவையை நெருப்பு மூட்டி அந்த நெருப்பினுள் சிறிது சிறிதாக தூவி விட வேண்டும்.

நெருப்பில் அவை எப்படி வெடித்து சிதறுகிறதோ அதுபோல உங்களுக்கு வரப்போகும் பிரச்சினைகளின் தாக்கம் குறைந்து உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

உங்களுக்கு வரப்போகும் பிரச்சனை பெரியதாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பாதிப்பு பெரியதாக இல்லாமல் அவை சாதாரணமாக மாறிவிடும்.

சிறிய பிரச்சினையாக இருந்தால் அந்த பிரச்சனை உங்களை நெருங்காமல் அகன்றுவிடும்.

யாருக்கு பிரச்சனை வரப் போகிறதோ அவர் மட்டுமே இந்த பரிகாரத்தை தங்கள் கைகளால் செய்ய வேண்டும்.

Leave a Reply