பிரபாஸ் படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா.

0

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்தில் இருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பாடல் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பாடலுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
அதே பொருள் தரும் வரிகள் ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இந்த இந்தி பதிப்பும் விரைவில் வெளியாக இருக்கின்றது.

மேலும் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் பிறந்த நாளில் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது.

2022 ஜனவரி 14 பொங்கல் திருநாளை முன்னிட்டு மிக பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம்.

Leave a Reply