வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளான்.
அத்துடன் இன்று காலை தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணம் செய்த தொடருந்து மெனிக்பாம் கல்லாறு பாலத்தை அண்மித்த போது அந்த காலத்தில் இரண்டு இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் தொடருந்து வருவதை அவதானித்த ஒரு இளைஞர் ஆற்றில் குதித்துள்ளார்.
மற்றைய இளைஞன் தொடருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் முருகன் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மேலும் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



