வாரிய பொல பிரதேச சபையின்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 19 பேர் தனது பதவியிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தாங்கள் பதவி விலகுவதற்கான கடிதத்தை வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயவிடம் இன்றையதினம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் திலகரத்ன பண்டார திஸாநாயக்க மீது முன்வைத்துள்ள போலியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் பதவி விலக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



