இரு வேறு இடங்களில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செயப்படுள்ளனர்.
இதற்கமைய புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த வாகனம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, குளியாப்பிட்டி, குருநாகல், ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதவான் நீதிமன்றின் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திருகோணமலை மாவட்டத்திலும் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் இவர்கள் புதயல் தோன்றுதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு கைதானவர்கள் கந்தளாய் மற்றும் கொடியகும்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



