ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது!

0

ஒரு தொகை ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் அவிஸ்ஸாவெல்ல காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட தல்துவா மற்றும் வெல்ல வீதி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செயப்பட நபரிடமிருந்து 15 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன,

அத்துடன் 24 முதல் 41 வயதிற்குட்பட்ட அவிசாவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்,

Leave a Reply