இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளே இவ்வாறுபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள் ஸ்புட்னிக் வி முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட 120, 000 பேருக்கான இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



