தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழில் உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது.
இதை அறிந்த விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை தனக்கு விருப்பமில்லை என்று கூறுகின்றார்.
இதன் பிரகாரம் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



