நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வரும் கொவிட் தொற்றின் பரவலை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலனிக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இன்று ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் நிலையினை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது பேசபடவுள்ளது.
மேலும் குறித்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், நாட்டை முழுமையாக முடக்கம் மாறும் சுகாதாரத் துறை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் தற்போதைய நிலையில் நாட்டை முழுமையாக முடக்குவாத தொடர்பில் இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.



