தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

0

தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளினால்
நேற்று நள்ளிரவு முதல் இருபத்தி நான்கு மணி நேர அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலையில் தங்களுக்கு உரிய வசதிகளை சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு அதுகேற்ப போதுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தொடருந்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரி சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply