இளவயது திருமணம் விவாக விவாகரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

0

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவினை உள்ளடக்கிய வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.

இதில் இளவயது திருமணம் விவாக விவாகரத்து தொடர்பிலான சட்ட விளக்கங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன.

பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் பதிவாளர் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் அஸ்வர் போன்றோர்கள் விளக்க உரைகளை முன்வைத்தார்கள்.

இதில் தம்பலகாமம் பள்ளிவாயல் சம்மேளன உறுப்பினர்கள்,ஹதீப்மார்கள், ஹாதி நீதிவான்,விவாக பதிவாளர் ,பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply