சி.பி.எஸ்.இ பிளஸ்-2 முடிவுகள் வெளியாகின – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

0

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பரீட்சை முடிவுகள் வெளியானதால், மாணவர்கள் இணையதளம் வழியாகவோ, பாடசாலைகளிலோ மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் 10, 11 வகுப்பில் எடுத்த மதிப்பெண்களில் முறையே 30 சதவீதம், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் என மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியானது. மதிப்பெண்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் இணையதளம் வழியாகவோ பள்ளிகளிலோ மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply