சரக்கு வேனில் அரிசி கடத்தல்!

0

மதுரையில் ரேஷன் கடை அரிசி கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநகர் பகுதியில் ரேஷன் அரிசியை வாகனத்தில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் மதுரை மண்டல உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு திருநகர் பகுதியில் ரேஷன் அரிசியை வாகனத்தில் கடந்து செல்வதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 60 மூடைகளில் 3,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அரிசி மூட்டைகள் திருநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அத்துடன் 24, 35,38 ஆகிய வயதினை உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply