பெண்கள் சுயதொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான முழுநாள் செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
குறித்த செயலமர்வானது மகளிர் விவகார வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் பிரதேச பெண்கள் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடன் திட்டங்களை மேற்கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களை விருத்தி செய்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அமையப் பெற்றது.
இதில் சுயதொழில் விருத்தி,சந்தைப்படுத்தல் ,உற்பத்தி திறன்களை வளர்த்தல்,கணக்கு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச முகாமையாளர் மைக்கல் நிரோசன் வளவாளராக கலந்து கொண்டு முன்வைத்தார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.புரபானந்தன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி,பெண்கள் வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஏ.நஸ்ரின் டிலானி உட்பட பெண்கள் சுய தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



