உத்தேச நிதிசீர்திருத்த சட்ட மூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

0

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதி சீர்திருத்த சட்ட மூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சீர்திருத்தங்கங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதி சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தேச நிதி சீர்திருத்த சட்ட மூலத்தினை வலுவிலக்க செய்யுமாறு கோரியே ஜே.வி.பி ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட தரப்பினர் குறித்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

Leave a Reply