திருவாரூரில் இருந்து திருக்குவளை நோக்கி தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது திருவாரூர் அருகே உள்ள திருமண மண்டப வாசலில் மணமக்கள் மவூரை சேர்ந்த சோப்ரா மற்றும் ரமா ஆகியோர் முதலமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் மு க ஸ்டாலின் அங்கு மணக்கோலத்தில் இருந்த ஜோடியை கண்டதும் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசி இருந்தனர் .
அதன் போது அந்த மணமக்கள் உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென அவரிடம் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் பிரகாரம் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உடனடியாக தனது கையால் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ளார்.
மேலும் திருமண மண்டப வாசலில் முதலமைச்சர் தலைமையில் தங்களுக்கு திருமணம் நடந்ததால் புதுமண ஜோடி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



