இந்தியாவில் பல கோடிக்கணக்காண மக்களின் மனதை கவர்ந்த யூடியூப் சேனல்- குவியும் பாராட்டு!

0

இந்தியாவில் பலரும் தங்களுக்கென யூடியூப் சேனலை தனியாக தொடக்கி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் பெரும்பாலானோர் சமையல் தொடர்பான யூடியூப் சேனலை தான் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இவற்றுள் முன்னணியிலுள்ள சேனல் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் ஆகும்.

மொத்தம் ஐந்து பேர் கொண்ட குறித்த சேனல், தமிழகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இவர்களுடன் இணைந்து சமைத்து, உணவுண்டு மகிழ்ச்சியடைந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

அதிலிருந்தே இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு முறை சமைக்கும் போது இவர்களுடைய கிராமத்து பேச்சு முறைகள் மக்களை வெகுவாக கவரும்.

இந்த சேனலை தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி, சமையல்காரர்கள் குடும்பம் நடத்துகிறது.

தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக ஒரு கோடி சந்தாதாரர்களை கடந்து வில்லேஜ் குக்கிங் சேனல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Leave a Reply