சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்றைய தினம் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கடந்த ஒரு மாத காலத்திற்குள் மன்னார் காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட குறித்த உலர்ந்த மஞ்சள் மூட்டைகளே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது
இதன்போது 28 மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மஞ்சள் மூட்டைகள் மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் காட்டுப் பகுதியில் வைத்து மன்னார் காவல்துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



