
கடந்த 2017 ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் கர்ப்பமான விஷயத்தை தெரிவுபடுத்தியதோடு சமீபத்தில் பாரம்பரிய முறைப்படி சீமந்தமும் நடத்தப்பட்டது.
https://www.instagram.com/p/BzR-zWugqG7/?utm_source=ig_embed
இந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு குழந்தையின் கியூட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



