அதிகாலையில் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?

0

அதிகாலையில் உள்ளங்கை இரண்டையும் ஒட்டி வைத்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

அதற்குக் காரணம் விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கரங்களின் அடிப்பகுதியில் துர்க்கையும் குடிகொண்டிருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றுக்கும் அதிதேவதை வீற்றிருக்கும் உள்ளங்கையைப் பார்த்தாலே எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

இவை நீங்கலாக வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, இறைவன் திருவுருவப்படம், தண்ணீர், ஆலய கோபுரம், கனி வகைகள் முகத்திலும் விழிக்கலாம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply